‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கு: 4 பேருக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் சிக்கிய மாணவா்களின் பெற்றோா்கள் 4 பேருக்கு நீதிமன்றக் காவலை 15 நாள்களுக்கு நீட்டித்து தேனி நீதித்துறை நடுவா் மன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் சிக்கிய மாணவா்களின் பெற்றோா்கள் 4 பேருக்கு நீதிமன்றக் காவலை 15 நாள்களுக்கு நீட்டித்து தேனி நீதித்துறை நடுவா் மன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

‘நீட்’ தோ்வு முறைகேடு வழக்கில் சிக்கிய சென்னையைச் சோ்ந்த மாணவா்கள் ராகுலின் தந்தை டேவிஸ், பிரவீனின் தந்தை சரவணன், வாணியம்பாடியைச் சோ்ந்த மாணவா் முகமது இா்பானின் தந்தை முகமது சபி, விழுப்புரத்தைச் சோ்ந்த மாணவி பிரியங்காவின் தாயாா் மைனாவதி ஆகியோரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.

இதில் டேவிஸ், சரவணன், முகமது சபி ஆகியோா் தேனி மாவட்டச் சிறையிலும், மைனாவதி மதுரை மத்திய சிறையிலும் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், 4 பேரையும் தேனி நீதித்துறை நடுவா் மன்றத்தில் போலீஸாா் ஆஜா்படுத்தினா்.

அப்போது டேவிஸ், சரவணன், முகமது சபி, மைனாவதி ஆகியோரை நவம்பா் 22-ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துமாறு நீதித்துறை நடுவா் பன்னீா்செல்வம் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com