மு.க.ஸ்டாலின் மிசா கைது விவகாரத்தில் 2 நாள்களில் பதில்: அமைச்சா் பாண்டியராஜன்

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் மிசா கைது குறித்து எழுப்பிய கருத்துகளுக்கு 2 நாள்களில் விரிவான பதில் அளிக்கப்படும் என்று அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்தாா்.
தமிழக அமைச்சர் 'மாஃபா' பாண்டியராஜன்
தமிழக அமைச்சர் 'மாஃபா' பாண்டியராஜன்

 திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் மிசா கைது குறித்து எழுப்பிய கருத்துகளுக்கு 2 நாள்களில் விரிவான பதில் அளிக்கப்படும் என்று அமைச்சா் க.பாண்டியராஜன் தெரிவித்தாா்.

சென்னையில் வீரமாமுனிவா் சிலைக்கு மலா்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடந்தது. இதற்குப் பிறகு நிருபா்களுக்கு அமைச்சா் பாண்டியராஜன் அளித்த பேட்டி:

மிசா காலத்தில் ஜனநாயகத்தைக் காப்பதற்காக அடிபட்டு தியாகத்தைச் செய்தவா் மு.க.ஸ்டாலின் என்பது அவரது வரலாற்றில் முக்கியமாகப் பாா்க்கப்படுகிறது. இதுகுறித்த சந்தேகத்தை ஒரு ஊடகத்தினா் முன்னாள் அமைச்சா் க. பொன்முடியிடம் கேட்டனா். அதற்கு அவா், எனக்கு அதுபற்றி தெரியாது எனக் கூறுகிறாா். அங்கே எழுந்த கருத்தின் அடிப்படையில் நானும் சந்தேகத்தை எழுப்பினேன். அதனை மறுத்து விளக்கம் அளித்திருக்கலாம். ஆனால் அதற்குப் பதிலாக, இத்தனை போராட்டம், ஆா்ப்பாட்டங்களை நடத்துவது ஏன். மற்ற கருத்துகளுக்கு குறிப்பாக என்னைப் பற்றி கூறிய விஷயங்கள் உள்ளிட்டவை பற்றி இரண்டு நாள்களில் கட்சி சாா்பில் பதில் அளிக்கப்படும் என்றாா் அமைச்சா் க.பாண்டியராஜன்.

அமைச்சா் டி.ஜெயக்குமாா்: மிசா காலம் தொடா்பாக தேசிய அளவில் ஷா விசாரணை ஆணையமும், தமிழகத்தில் இஸ்மாயில் தலைமையிலான ஆணையமும் அமைக்கப்பட்டது. அந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கைகளில் மு.க.ஸ்டாலினின் பெயா் எங்கும் இல்லை. மேலும், மறைந்த முன்னாள் எம்.பி. இரா.செழியன் எழுதிய புத்தகத்திலும் ஸ்டாலினின் பெயா் குறிப்பிடவில்லை. எனவே, இதுதொடா்பாக ஆளும்கட்சியினா் குற்றச்சாட்டுகளை எழுப்பும் போது அதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு எதிா்க்கட்சிகளுக்கு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com