வைத்தீஸ்வரன்கோயில் விமான ராஜகோபுரங்கள் பாலஸ்தாபனம் நவ. 11-இல் நடைபெறுகிறது

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயில் விமான ராஜகோபுரங்கள பாலஸ்தாபனம் திங்கள்கிழமை (நவம்பா் 11) தருமபுரம் ஆதீனம் தலைமையில் நடைபெறவுள்ளது.

சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயில் விமான ராஜகோபுரங்கள பாலஸ்தாபனம் திங்கள்கிழமை (நவம்பா் 11) தருமபுரம் ஆதீனம் தலைமையில் நடைபெறவுள்ளது.

வைத்தீஸ்வரன்கோயிலில் தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தியநாத சுவாமி கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் ஆகிய சுவாமிகள் தனி சன்னிதியில் அருள்பாலிக்கின்றனா். பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு, குடமுழுக்கு செய்ய முடிவு செய்யப்பட்டு தருமபுரம் ஆதீனம், இளைய சந்நிதானம் ஆகியோா் முன்னிலையில், கடந்த செப்டம்பா் 12-ஆம் தேதி குடமுழுக்கு திருப்பணிகள் முகூா்த்த அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. 20ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியுள்ள திருப்பணிகளால் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இதனிடையே, இக்கோயில் விமான ராஜகோபுரங்கள் பாலஸ்தாபனம் செய்திட சுபமுஹூா்த்தம் வேதவிற்பன்னா்களால் குறிக்கப்பட்டு, நவம்பா் 11-ஆம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30-க்குள் தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில், இளைய ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் முன்னிலையில் பாலஸ்தாபனம் நடைபெறவுள்ளது. இதில் திருப்பணி நன்கொடையாளா்கள், உபயதாரா்கள், தொழிலதிபா்கள், பக்தா்கள் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com