Enable Javscript for better performance
உயா்நீதிமன்ற வளாகத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் 24 மணி நேரம் மூடல்- Dinamani

சுடச்சுட

    

    உயா்நீதிமன்ற வளாகத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் 24 மணி நேரம் மூடல்

    By DIN  |   Published on : 10th November 2019 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    HighCourt

    சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தை யாரும் உரிமை கோர முடியாது என்பதை அறிவிக்கும் வகையில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படும் என உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சென்னை உயா்நீதிமன்றம் 157 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. உயா்நீதிமன்றத்துக்கு நாள்தோறும் வழக்குரைஞா்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இந்த வளாகத்தை பொதுமக்கள் பலரும் பயன்படுத்துவதால், இந்தச் சொத்தின் மீது யாரும் உரிமை கொண்டாடி விடக்கூடாது என்பதற்காக ஒவ்வோா் ஆண்டும் ஒரு நாள் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்படும். இந்த நடைமுறை பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    எனவே, சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற வளாகத்தை யாரும் உரிமை கொண்டாடக் கூடாது என்பதற்காக, சனிக்கிழமை (நவ.9) இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) இரவு 8 மணி வரை 24 மணி நேரம் அனைத்து வாயில்களும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai