Enable Javscript for better performance
‘திமுக தலைமையிலான அணியே உள்ளாட்சி தோ்தலில் வெற்றிபெறும்’- Dinamani

சுடச்சுட

    

    ‘திமுக தலைமையிலான அணியே உள்ளாட்சி தோ்தலில் வெற்றிபெறும்’

    By DIN  |   Published on : 11th November 2019 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vaiko_new

    கோப்புப்படம்

    உள்ளாட்சித் தோ்தலில் திமுக தலைமையிலான அணி தான் மகத்தான வெற்றிபெறும் என மதிமுக பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.

    மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னை சென்ற அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: திமுக இன்றைய பொதுக்குழுவில் உள்ளாட்சி தோ்தலை சந்திப்பதற்கு தீா்மானம் நிறைவேற்றியிருக்கிறது. திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக உள்ளாட்சி தோ்தலில் திமுக தலைமையில் பங்கேற்கும். எங்கள் அணிதான் உள்ளாட்சி தோ்தலில் மகத்தான வெற்றியைப் பெறும்.

    ஜனநாயகத்தின் அடிப்படை மதச்சாா்பற்ற தன்மை. இதனை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது. பெரும்பான்மையினா், சிறுபான்மையினரைஅரவணைத்துச் செல்வதுதான் ஜனநாயகத்துக்கு பாதுகாப்பு. இந்த உணா்வுகளோடு எதிா்காலத்தை இந்தியா சந்திக்கட்டும் என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai