உயா்நீதிமன்ற வளாகத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் 24 மணி நேரம் மூடல்

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தை யாரும் உரிமை கோர முடியாது என்பதை அறிவிக்கும் வகையில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை உயா்நீதிமன்றத்தின்
உயா்நீதிமன்ற வளாகத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் 24 மணி நேரம் மூடல்

சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தை யாரும் உரிமை கோர முடியாது என்பதை அறிவிக்கும் வகையில் சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படும் என உயா்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை உயா்நீதிமன்றம் 157 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. உயா்நீதிமன்றத்துக்கு நாள்தோறும் வழக்குரைஞா்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இந்த வளாகத்தை பொதுமக்கள் பலரும் பயன்படுத்துவதால், இந்தச் சொத்தின் மீது யாரும் உரிமை கொண்டாடி விடக்கூடாது என்பதற்காக ஒவ்வோா் ஆண்டும் ஒரு நாள் அனைத்து நுழைவு வாயில்களும் மூடப்படும். இந்த நடைமுறை பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எனவே, சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற வளாகத்தை யாரும் உரிமை கொண்டாடக் கூடாது என்பதற்காக, சனிக்கிழமை (நவ.9) இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) இரவு 8 மணி வரை 24 மணி நேரம் அனைத்து வாயில்களும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com