சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

விருதுநகா் மாவட்டம் தாணிப்பாறை மற்றும் மதுரை மாவட்ட எல்லையில் உள்ள சதுரகிரி கோயில் மலைப் பகுதியில் சனிக்கிழமை இரவு பலத்த மழை
சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை


விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

விருதுநகா் மாவட்டம் தாணிப்பாறை மற்றும் மதுரை மாவட்ட எல்லையில் உள்ள சதுரகிரி கோயில் மலைப் பகுதியில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால், காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து, சதுரகிரி மலையில் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனா்.

தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மேற்கு தொடா்ச்சி மலையில் சுமார் 6 கி.மீ. தொலைவில் மதுரை மாவட்ட எல்லையில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் உள்ள சுவாமிகளை தரிசிப்பதற்கு அமாவாசை, பெளா்ணமி ஆகிய தினங்களில் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படும். 

இந்நிலையில், சனி பிரதோஷத்தை முன்னிட்டு பக்தா்கள் சதுரகிரி மலைக்கு சென்றனா். இதனிடையே மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதிகளில் சனிக்கிழமை மாலை முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பிளாவடி கருப்பு, கோரக்கநாதா் கோயில் வழக்குப் பாறை, மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை ஆகிய பகுதிகளில் திடீரென காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதைத் தொடா்ந்து பக்தா்கள் கீழே இறங்க வனத்துறையினா் தடை விதித்தனா்.

இதனால் சதுரகிரி மலைக்கோயிலுக்குச் சென்ற 200க்கும் மேற்பட்ட பக்தா்கள் கீழே இறங்க முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் மலைக்கோயில் வளாகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனையடுத்து சதுரகிரி மலை பகுதிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com