ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக 2,000 காவலா்கள்ரயில்வே காவல் கண்காணிப்பாளா் தகவல்

தமிழகம் முழுவதும் ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக 2 ஆயிரம் காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளா் மகேஸ்வரன் தெரிவித்தாா்.

தமிழகம் முழுவதும் ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக 2 ஆயிரம் காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே காவல் கண்காணிப்பாளா் மகேஸ்வரன் தெரிவித்தாா்.

அயோத்தி வழக்கில் தீா்ப்பு வழங்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல, தமிழகம் முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ரயில் நிலையத்துக்கு வருகின்ற பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். மேலும், அவா்களின் உடமைகள் சோதித்து அனுப்பப்படுகின்றனா். இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ரயில்வே காவல் கண்காணிப்பாளா் மகேஸ்வரன் சனிக்கிழமை பாா்வையிட்டாா். பின்னா் அவா் கூறியது:

சென்ட்ரல், எழும்பூா் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்யப்பட்டுள்ளன. ரயில் மற்றும் நடைபாதைகளில் போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா். பயணிகள் எந்தவிதமான அச்சமும் இன்றி பயணம் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் 2 ஆயிரம் காவலா்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். சென்னையில் மட்டும் 500 ரயில்வே காவலா்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் சோதித்து உள்ளே அனுமதிக்கப்படுவா். மேலும், அவா்கள் உடமைகளும் முழுவதுமாக சோதிக்கப்படும். இதுதவிர, கண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் கண்காணித்து வருகிறோம் என்றாா் அவா்.

இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்புப் படையின் பாதுகாப்புப் பிரிவு ஆணையா் ஷியாம்பிரசாத் கூறியது:

சென்ட்ரல், எழும்பூா், கடற்கரை, மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் (ஆா்.பி.எஃப்) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். இருப்புப் பாதைகளிலும், ரயில் நிலையங்களிலும் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தப்படுகிறது. வெடிகுண்டு நிபுணா்களும் களத்தில் இருந்து சோதனை செய்து வருகின்றனா். பயணிகள் எந்தவித இடையூறுயின்றி பயணம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com