கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் செவ்வாய் மாலை வெளியிடப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி

சென்னை: கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் செவ்வாய் மாலை வெளியிடப்பட்டது.

கிராம நிர்வாக அலுவலர் உள்பட குரூப் 4 தொகுதிக்கு உட்பட்ட 6 ஆயிரத்து 491 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை 13.60 லட்சம் பேர் எழுதினர். 

ஏற்கெனவே, தேர்வுக்கால அட்டவணைப் பட்டியலில் குரூப் 4 தேர்வுக்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் டிசம்பரில்  வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் செவ்வாய் மாலை வெளியிடப்பட்டது.

தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in ன்ற இணையதளத்தில் தேர்வாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.

டிஎன்பிஎஸ்சி வரலாற்றிலேயே முதன்முறையாக தேர்வு நடைபெற்ற 72 நாட்களிலேயே முடிவுகள் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சான்றிதழ் சரிபார்ப்பிற்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின்  விபரங்கள் விரைவில் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில்; வெளியிடப்படும். 

அதேபோல் தேர்வு முடிவுகள் தேர்வாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கபப்டும் என்பது கவனிக்கத்தக்கது.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com