பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளைப் பாதுகாக்க வேண்டும்: ராமதாஸ்

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்த பழங்கால சிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்த பழங்கால சிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 2016-17-ஆம் ஆண்டுகளில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் நடத்திய சோதனைகளில் ஏராளமான பழங்கால சிலைகள், கற்சிலைகள், மரச் சிற்பங்கள் கைப்பற்றப்பட்டன.

அந்தச் சிலைகளின் மதிப்பு பலநூறு கோடி ரூபாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்தகைய சிலைகள் அவற்றுக்குரிய மதிப்புடன் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கிண்டியில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகம் அமைந்துள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தின் தரைத் தளத்தில் எந்தவிதப் பாதுகாப்புமின்றி குவித்து வைக்கப்பட்டுள்ளன.

வெட்ட வெளியில் எந்த பாதுகாப்புமின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகள் வெயிலிலும் மழையிலும் கிடக்கும்போது அவை பல்வேறு வேதிவினைகளுக்கு உள்ளாகும்.

இதனால் சிலைகள் அழகையும் சிறப்பம்சங்களையும் இழந்து சாதாரணமான கற்களாகவும் மரத்துண்டுகளாகவும் மாறிவிடக்கூடும். சிலைகளைப் பாதுகாத்து வைக்க கபாலீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடம் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், முறைப்படி விண்ணப்பித்து அதை பெற்றுக்கொள்ளலாம் என்றும் இந்து சமய அறநிலையத் துறை கூறியுள்ளது.

எனவே, கபாலீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை முறைப்படி பெற்று, அதில் அருங்காட்சியகம் அமைத்து விலைமதிப்பற்ற சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிய மாவட்டங்களுக்கான அரசாணை: செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, தென்காசி ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கான அரசாணை வெளியிடப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அந்த மாவட்டங்களுக்கான புதிய ஆட்சியா் அலுவலக வளாகம், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பிற கட்டமைப்பு வசதிகளையும் விரைந்து ஏற்படுத்த வேண்டும்.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட 6 மருத்துவக் கல்லூரிகளுக்கும் தலா ரூ.100 கோடி வீதம் தமிழக அரசு நிதி ஒதுக்கியிருப்பது பாராட்டத்தக்கது என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com