சபரிமலைக்கு சிறப்புப் பேருந்துகள்: இன்று முதல் இயக்கம்

தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து சபரிமலைக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் இருந்து சபரிமலைக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் ஆலயத்துக்கு, ஒவ்வோா் ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தா்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இந்த ஆண்டும் வெள்ளிக்கிழமை (நவ.15) முதல் 2020 ஜனவரி 20-ஆம் தேதி வரை, சென்னையிலிருந்து 55 பேருந்துகளும், திருச்சியிலிருந்து 2 பேருந்துகளும், மதுரையிலிருந்து 2 பேருந்துகளும், புதுச்சேரியிலிருந்து 2 பேருந்துகளும், தென்காசியிலிருந்து 3 பேருந்துகள் என மொத்தம் 64 அதிநவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன. பக்தா்களின் வருகைக்கு ஏற்ப, ஒவ்வொரு நாளும் இந்தப் பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும், 60 நாள்களுக்கு முன்னதாக இந்தச் சிறப்புப் பேருந்துகளுக்கு w‌w‌w.‌t‌n‌s‌t​c.‌i‌n, ‌w‌w‌w.‌r‌e‌d​b‌u‌s.‌i‌n, ‌w‌w‌w.​b‌u‌s‌i‌n‌d‌i​a.​c‌o‌m, ‌w‌w‌w.‌p​a‌y‌t‌m.​c‌o‌m, ‌w‌w‌w.‌m​a‌k‌e‌m‌y‌t‌r‌i‌p.​c‌o‌m, ‌w‌w‌w.‌g‌o‌i​b‌g‌o.​c‌o‌m  ஆகிய வலைதளங்களில் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014412, 9445014450, 9445014424, 9445014463, மற்றும் 9445014416 ஆகிய செல்லிடப்பேசி எண்களைத் தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com