தமிழகத்தில் வழக்கமான பருவ மழை பெய்துவிடும்.. ஆனால் சென்னை, திருவள்ளூரில்?

தமிழகத்தில் ரெட் அலர்ட்டுடன் தொடங்கிய வடகிழக்குப் பருவ மழை தென் தமிழகப் பகுதிகளில் கலக்கி வருகிறது.இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட கடற்கரை மா
chennai rain
chennai rain


சென்னை: தமிழகத்தில் ரெட் அலர்ட்டுடன் தொடங்கிய வடகிழக்குப் பருவ மழை தென் தமிழகப் பகுதிகளில் கலக்கி வருகிறது.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களில் ஒரு பெரிய இடைவெளியை விட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

தமிழத்தின் தென் மாவட்டங்களில் மழை அதகளம் செய்து வருகிறது. பாளையம்கோட்டையில் இதுவரை இல்லாத அளவுக்கு 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. கிழக்குக் கடலோர பகுதிகளான காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் விரைவில் மழை வந்துவிடும்.

இந்த மழை காரணமாக, தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை அளவு இந்த ஆண்டு வழக்கமான அளவை விட அதிகமான புள்ளிகளைத் தொடும் என்று நம்பலாம். ஆனால் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில்!!!

கிழக்கு திசையில் இருந்து காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நவம்பர் 20 - 23 தேதி வரை சிறப்பான மழை வாய்ப்பு உள்ளது. இந்த மழையை நிச்சயம் நாம் இழந்துவிடக் கூடாது. ஏன் என்றால், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெய்யவிருக்கும் மழையாகும். அதன்பிறகு இந்த மழை தென் தமிழகத்தை நோக்கிச் சென்றுவிடும்.

எம்ஜிஓ காரணமாக தமிழகம் முழுக்க மழை பெய்யும் காலமாகவும் அது இருக்கும். எனவே, நவம்பர் 20 - 23 காலக்கட்டத்தை காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் ஒரு போதும் இழந்துவிடக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே போதிய மழை மண்ணில் விழ பிரார்த்திப்போம்..
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com