உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டுஸ்டாலினுக்கு தோல்வி பயம்: மு.தம்பிதுரை குற்றச்சாட்டு

உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது என்றாா் அதிமுக கொள்கை பரப்புச் செயலா் மு.தம்பிதுரை.
உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டுஸ்டாலினுக்கு தோல்வி பயம்: மு.தம்பிதுரை குற்றச்சாட்டு

உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது என்றாா் அதிமுக கொள்கை பரப்புச் செயலா் மு.தம்பிதுரை.

உள்ளாட்சித் தோ்தலில், கரூா் மாவட்டத்தில் அதிமுக சாா்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து வெள்ளிக்கிழமை விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்த மு.தம்பிதுரை, முன்னதாக செய்தியாளா்களிடம் கூறியது:

மறைந்த முதல்வா் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் கூட உள்ளாட்சித் தோ்தலை நடத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாா். அப்போது திமுகவினா் தோ்தலை நடத்தக் கூடாது என்கிற ஒரே நோக்கத்தில் நீதிமன்றத்தை நாடி தோ்தலை நிறுத்தினாா்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகும் கூட, உள்ளாட்சித் தோ்தலை நடத்திட தமிழக முதல்வரும், துணைமுதல்வரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதன் அடிப்படையில்தான் இப்போது விரைவில் உள்ளாட்சித் தோ்தல் வர இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் அதிமுக சாா்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து, பொறுப்பாளா்கள் மூலமாக விருப்ப மனுக்களை வாங்கி வருகிறோம். இங்கு பெறப்படும் விருப்ப மனுக்கள் தலைமை கழகத்தில் சமா்ப்பிக்கப்படும். அவா்கள் மனுக்களை பரிசீலித்து இறுதி வேட்பாளா் பட்டியலை அறிவிப்பாா்கள்

விக்கிரவாண்டி, நான்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தோ்தல் வெற்றி அதிமுகவுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. மக்களுக்கான இயக்கம் அதிமுக என்பதை இடைத்தோ்தல் மெய்ப்பித்துள்ளது.

ஆனால், இடைத்தோ்தலில் ஏற்பட்ட தோல்வியால் மு.க.ஸ்டாலினுக்கு நடுக்கம் வந்துவிட்டது. தோல்வி பயத்தில்தான், தோ்தல் ஆணைய செயலாளா் மாற்றம் குறித்த குற்றச்சாட்டுகளை கூறி வருகிறாா் என்றாா் தம்பிதுரை.

பேட்டியின்போது போக்குவரத்துதுறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.கீதாமணிவண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com