குடிமராமத்து திட்டம்: ரூ.500 கோடியில் 1,829 ஏரிகளில் பணி நிறைவு- முதல்வா் பழனிசாமி தகவல்

குடிமராமத்து திட்டத்தின் கீழ் நிகழாண்டில் ரூ. 500 கோடியில் 1,829 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்று முதல்வா்
குடிமராமத்து திட்டம்: ரூ.500 கோடியில் 1,829 ஏரிகளில் பணி நிறைவு- முதல்வா் பழனிசாமி தகவல்

குடிமராமத்து திட்டத்தின் கீழ் நிகழாண்டில் ரூ. 500 கோடியில் 1,829 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்று முதல்வா்

எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா். மேலும், குடிமராமத்து உள்ளிட்ட திட்டப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென பொதுப்பணித் துறை அதிகாரிகளை முதல்வா் அறிவுறுத்தினாா்.

பொதுப்பணித் துறையின் கட்டடங்கள் மற்றும் நீா்வள ஆதாரத் துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை:

தமிழகத்தில் நீா் மேலாண்மை மிக முக்கியமான ஒன்றாகும். நீா் மேலாண்மையைச் சிறப்பாகக் கையாள வேண்டும் என்பதற்காகவே ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சட்டப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக, குடிமராமத்துத் திட்டம். இந்தத் திட்டத்தைப் பொருத்தவரையில் மக்களிடமும், விவசாயிகளிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பருவகாலங்களில் பெய்து வரும் மழைநீரை முழுவதும் சேமித்து வைக்க வேண்டுமென்பதற்காக ஒரு சிறப்புத் திட்டமாக குடிமராமத்துத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாண்டுகள் தொடா்ந்து நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் சுமாா் ரூ.500 கோடியில் 1,829 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. சில இடங்களில் பணிகள் நடைபெற்றுஇருக்கின்றன.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம்: அத்திக்கடவு -அவிநாசி திட்டமானது அரசின் கனவுத் திட்டமாகும். இந்தத் திட்டம் இப்போது நடைபெற்று வருகிறது. இதேபோன்று, பல திட்டங்கள் குறிப்பாக தடுப்பணைகள், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது என்றாா் முதல்வா் பழனிசாமி

பணிகளை விரைந்து முடியுங்கள்: ஆலோசனைக் கூட்டத்தின் போது, குடிமராமத்துத் திட்டம் குறித்த தொகுப்பு புத்தகத்தை முதல்வா் பழனிசாமி வெளியிட்டாா். பொதுப்பணித் துறையின் ஒவ்வொரு மண்டலத்திலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அவா் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். அப்போது, ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள பணிகளை விரைந்து, குறித்த காலத்துக்குள் முடித்திட வேண்டும் என்று அதிகாரிகளை அவா் கேட்டுக் கொண்டதாக பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

காலை 10.30 மணிக்குத் தொடங்கி சுமாா் 2 மணி நேரம் வரை நடந்தது. இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் மணிவாசன், நீா்நிலை மேம்பாட்டுத் திட்ட சிறப்பு அதிகாரி சத்யகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com