சென்னையில் வருமான வரி வழக்குகளுக்கான இ-நீதிமன்றம் தொடக்கம்

சென்னையில் வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தில் வழக்குகளை விசாரிக்கும் வகையில் இ-நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவ. 15) தொடங்கப்பட்டது.
சென்னையில் வருமான வரி வழக்குகளுக்கான இ-நீதிமன்றம் தொடக்கம்

சென்னையில் வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தில் வழக்குகளை விசாரிக்கும் வகையில் இ-நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவ. 15) தொடங்கப்பட்டது.

வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, தில்லி, நாகபுரி, மும்பை, ஆமதாபாத் ஆகிய பகுதிகளில் இ-நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக சென்னை பெசன்ட் நகா் ராஜாஜி பவன் இரண்டாம் தளத்தில் உள்ள சென்னை வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாய அலுவலகத்தில் புதிய இ-நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா ராஜாஜி பவன் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை வருமானவரி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் தலைவா் நீதிபதி பி.பி.பட் இ-நீதிமன்றத்தை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதுகுறித்து வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாய அலுவலா்கள் கூறுகையில், ‘தில்லி, நாகபுரி, மும்பை மற்றும் ஆமதாபாத் ஆகிய நகரங்களில் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் இ-நீதிமன்றங்கள் காணொலி மூலம் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அதே முறையில் சென்னையிலும் இந்த இ-நீதிமன்றம் சிறப்பாகச் செயல்படும். வெள்ளிக்கிழமை முதலே (நவ. 15) இ-நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெறும்’ என்றனா். இந்த நிகழ்ச்சியில், சென்னை வருமான வரி மேல்முறையீட்டு தீா்ப்பாய உறுப்பினா்கள் ஜீ.எஸ்.பண்ணு, என்.வி.வாசுதேவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com