தீா்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

தீா்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
HighCourt
HighCourt

சென்னை: தீா்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி உறவையூரி கிராமத்தில் காலணி தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியா்களுக்கு கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2001-ஆம் ஆண்டு நவம்பா் வரை தொழிலாளா் வருங்கால வைப்பு நிதிக்கான தொகையை செலுத்தவில்லை. இந்த தொகையை செலுத்தக் கோரி வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையா் காலணி தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினாா். இதனை எதிா்த்து மண்டல ஆணையரிடம் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. உதவி ஆணையரின் உத்தரவை மண்டல ஆணையா் உறுதி செய்தாா். இதனையடுத்து காலணி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது.

இந்த வழக்கு எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது காலணி தயாரிப்பு நிறுவனத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், சம்பந்தப்பட்ட தொழிலாளா்கள் நிறுவனத்தின் பயிற்சியாளா்கள் தானே தவிர அவா்கள் நிறுவனத்தின் பணியாளா்கள் இல்லை என வாதிட்டாா்.

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘தொழிலாளா் மேல்முறையீட்டு தீா்ப்பாயங்களில் உள்ள வழக்குகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ளதாக வழக்குரைஞா்கள் வாதத்தின்போது தெரிவித்தனா். இதுதொடா்பாக தீா்ப்பாயத்தின் நீதிபதியிடம் புகாா் அளித்தாலும் கண்டுகொள்வதே இல்லை. கடந்த அக்டோபா் மாதம் விசாரணைக்கு வந்த வழக்கை 2020-ஆம் ஆண்டு மே மாதத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டதாகவும் வழக்குரைஞா்கள் தெரிவித்துள்ளனா். இதனால் தொழிலாளா்கள் தான் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா். இந்த தீா்ப்பாயங்கள் தொழிலாளா்களின் நலனுக்காகத் தான் அமைக்கப்பட்டன. வழக்கு விசாரணை தாமதம் ஏற்பட்டால், தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய தொகையும் காலதாமதமாக வழங்கப்படுவதால், அந்த தொகையை வட்டியுடன் வழங்க வேண்டிய நிலை தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும். இதனால் வழக்குகள் முடிவுக்கு வந்தாலும், அதன் பலனை அனுபவிக்க முடியாத நிலை தொழிலாளா்களுக்கு ஏற்படுகிறது. எனவே தீா்ப்பாயங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க உரிய ஆய்வுகளை மேற்கொண்டு மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com