Enable Javscript for better performance
கரூர் கொசுவலை நிறுவனத்தில் 3-ஆவது நாளாக வருமானவரித்துறை சோதனை: ரூ.32 கோடி பறிமுதல்?- Dinamani

சுடச்சுட

    

    கரூர் கொசுவலை நிறுவனத்தில் 3-ஆவது நாளாக வருமானவரித்துறை சோதனை: ரூ.32 கோடி பறிமுதல்?

    By DIN  |   Published on : 17th November 2019 09:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    income-tax-raid

     

    கரூா் வெண்ணைமலையைத் தலைமை அலுவலகமாகக் கொண்டு தனியாா் ஏற்றுமதிரக கொசுவலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனா்.

    வருமான வரித் துறையினா் 5 குழுக்களாகப் பிரிந்து விடிய, விடிய நடைபெற்ற இந்தச் சோதனை ஞாயிற்றுக்கிழமையும் நீடிக்கிறது. 

    முன்னதாக, சேலம் புறவழிச்சாலையில் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலை, கோவைச்சாலையில் உள்ள தொழிற்சாலை மற்றும் ராம்நகரில் உள்ள நிறுவன உரிமையாளரின் வீடு உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை நடந்த சோதனையில் கைப்பற்ற ஆவணங்களை வெண்ணைமலையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனா்.

    பின்னா் கைப்பற்றப்பட்ட ஆவணங்களைக்கொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டனா். இந்தச் சோதனையின்போது ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai