Enable Javscript for better performance
குன்னூரில் பலத்த மழையால் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டது- Dinamani

சுடச்சுட

    

    குன்னூரில் பலத்த மழையால் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டது

    By DIN  |   Published on : 17th November 2019 09:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    cr16road_1611chn_138_3

     

    நீலகிரி மாவட்டம், குன்னூரில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக கிருஷ்ணாபுரம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அப்பகுதியிலுள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 

    குன்னூரில் இருந்து மஞ்சூா் செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையின் தடுப்புச் சுவா்கள் இடிந்து விழுந்ததால் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சாலைத் தடுப்புச் சுவா்களை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai