Enable Javscript for better performance
மரக்காணத்திலிருந்து சென்னைக்கு குடிநீர்: அதிகாரிகள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    மரக்காணத்திலிருந்து சென்னைக்கு குடிநீர்: அதிகாரிகள் ஆய்வு

    By DIN  |   Published on : 17th November 2019 04:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    water-life

    கந்தாடு கழுவேலி ஏரியில் தேங்கியுள்ள நீரை பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழ்நாடு நதிநீர் பாதுகாப்புக் கழகத் தலைவர் சத்தியகோபால் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர். உடன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிர

     

    விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் கழுவேலி ஏரியில் தேங்கும் நீரை நன்னீராக மாற்றி, சென்னை மக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதற்கான புதிய திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு நதிநீர் பாதுகாப்புக் கழக அதிகாரிகள் குழுவினர் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தனர்.

    மரக்காணம் வட்டம், கந்தாடு, வண்டிப்பாளையம் ஆகிய கிராமப் பகுதிகளில் கடற்கரையை ஒட்டிய கழுவேலி ஏரி எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இந்த ஏரி நீரை, நன்னீராக மாற்றி சென்னை மாநகர பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டுக்கு கொண்டு செல்வதற்கான திட்டப் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

    இந்த குடிநீர் திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு நதிநீர் பாதுகாப்புக் கழகத் தலைவரும், மேலாண் இயக்குநருமான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சத்தியகோபால் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு செய்தனர்.

    கழுவேலி ஏரிப் பகுதியில் தேங்கியுள்ள நீரை ஆய்வு செய்த அவர்கள், மரக்காணத்திலிருந்து சென்னைக்கு குடிநீரை கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விழுப்புரம் மாவட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தனர்.

    இதைத் தொடர்ந்து, மரக்காணம் வட்டம், பிரம்மதேசம் ஏரியில் பொதுப் பணித் துறை சார்பில், ரூ.22 லட்சத்தில் நிகழாண்டு நடைபெற்று முடிந்துள்ள ஏரி குடிமராமத்துப் பணிகளையும் சத்தியகோபால் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், திண்டிவனம் சார் - ஆட்சியர் எஸ்.அனு, விழுப்புரம் மாவட்ட பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் ஜவகர், தமிழ்நாடு நதிநீர் பாதுகாப்புக் கழக உறுப்பினர்களான செயற்பொறியாளர்கள் பழனிச்சாமி, சீனுவாசராவ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் ஜோதி, மரக்காணம் வட்டாட்சியர் ஞானம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai