19-ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் அறிவிப்பு

19-ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
19-ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் அறிவிப்பு

19-ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வரும் 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படும் நிலையில், புதிய நிறுவனங்களுக்கு அனுமதி, மாநில தகவல் ஆணையர் நியமனம் உள்ளிட்ட சில முக்கிய முடிவுகள் மேற்கொள்வது தொடர்பாக இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com