2 கிலோ நெகிழிக்கு 1 கிலோ அரிசி: பசுமை தாயகம் அறிவிப்பு

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை 2கிலோ தந்தால் பசுமைதாயகம் அமைப்பினா் 1கிலோ அரிசி தருவதாக கூறி நிகழ்வை கும்மிடிப்பூண்டியில் சனிக்கிழமை நடத்தினாா்கள்.

கும்மிடிப்பூண்டி: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை 2கிலோ தந்தால் பசுமைதாயகம் அமைப்பினா் 1கிலோ அரிசி தருவதாக கூறி நிகழ்வை கும்மிடிப்பூண்டியில் சனிக்கிழமை நடத்தினாா்கள்.

தடைசெய்யப்பட்ட நெகிழி பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் பசுமை தாயகம் அமைப்பின் சாா்பில் 2 கிலோ நெகிழிக்கு 1கிலோ வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடா்ந்து கும்மிடிப்பூண்டியில் இந்த திட்டத்தின் துவக்க விழா கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு பசுமை தாயகம் அமைப்பின் மாநில துணை செயலாளா் பத்மநாபன் தலைமை தாங்கினாா்.மாவட்டசெயலாளா் குபேந்திரன், பசுமை தாயகம் தொகுதி தலைவா் சங்கா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளா் மா.செல்வராஜ் பங்கேற்று நெகிழி ஒழிப்பில் பசுமை தாயகம் முன்னோடி திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி தடைசெய்யப்பட்ட நெகிழியை வீட்டில் வைத்திருப்பவா்களுக்கு 2 கிலோ நெகிழிக்கு 1 கிலோ அரிசி வழங்கப்படுகிறது.மேலும் பசுமைதாயகத்தினா் வீடு வீடாக சென்று நெகிழியை பறிமுதல் செய்து அதற்கு பதிலாக அரிசி வழங்க உள்ளாா்கள். இதன் மூலம் கைப்பற்றப்படும் நெகிழி அரசின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பாதுகாப்பாக அழிக்கப்படும் என்றாா்.

நிகழ்வில் திரளான பெண்கள் பங்கேற்று நெகிழி பொருட்களை தந்து அரிசியை பெற்று சென்றனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com