சென்னையில் நவ. 17 பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
By DIN | Published on : 17th November 2019 08:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை அதிகரித்தும், டீசல் விலை மாற்றமின்றியும் ஞாயிற்றுக்கிழமை விற்பனையாகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த நிலையில், சில தினங்கள் குறையத் தொடங்கியது. தற்போதைய சூழலில் சில தினங்களில் குறைந்தும், அதிகரித்தும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் சனிக்கிழமை விலையில் இருந்து பெட்ரோல் விலை அதிகரித்தும், டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனையாகிறது.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 13 காசுகள் அதிகரித்து ரூ. 76.81 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் மாற்றமின்றி ரூ. 69.54 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.