போடிமெட்டு மலைச்சாலையில் மண் சரிவு: 9 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

போடிமெட்டு மலைச்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட மண் சரிவால் 9 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போடிமெட்டு
போடிமெட்டு

போடி: போடிமெட்டு மலைச்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட மண் சரிவால் 9 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போடி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. போடி மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் தொடர்ந்து விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் போடிமெட்டு மலைச்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு புலியூத்து அருவிக்கு மேல் 11 ஆவது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டது.

மண் சரிவினால் சாலை முழுவதும் மண் மூடியது. இதனால் போடி மூணாறு சாலையில் போடிமெட்டு மலைச்சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதுகுறித்து தகவல் கிடைத்து போடி குரங்கணி போலீஸார் போடிமெட்டு வழியாக கேரளத்துக்கு செல்லும் அனைத்து வாகனங்களையும் போடி முந்தல் சோதனை சாவடியிலேயே நிறுத்தினர்.

அதேபோல் கேரளத்திலிருந்து வந்த வாகனங்களை போடிமெட்டு மலை கிராமத்தில் உள்ள சோதனை சாவடியில் நிறுத்தி வைத்தனர். இதனால் போடிமெட்டு மலைச்சாலையில் 9 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஜே.சி.பி இயந்திரத்தை வரவழைத்து மண் சரிவுகளை அப்புறப்படுத்தினர்.

இப்பணிகள் காலை 9 மணிக்கு முடிந்த நிலையில் தற்போது ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. பின்னர் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் செல்லவில்லை. இதனால் போக்குவரத்து சீரமைப்பதில் சிரமம் ஏற்படவில்லை என குரங்கணி போலீஸார் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com