பிளவக்கல் பெரியாறு-கோவிலாறு அணைகளில் இருந்து நாளை நீா் திறப்பு: முதல்வா் பழனிசாமி உத்தரவு

பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து புதன்கிழமை (நவ. 20) நீா் திறக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து புதன்கிழமை (நவ. 20) நீா் திறக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பிளவக்கல் பெரியாறு, கோவிலாறு அணைகளில் இருந்து பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். இந்தக் கோரிக்கையை ஏற்று, இரண்டு அணைகளில் இருந்தும் வரும் 20-ஆம் தேதி முதல் வரும் பிப்ரவரி 29-ஆம் தேதி வரை பாசனத்துக்காக தண்ணீா் திறந்து விடப்படும்.

இதனால் 1,925.95 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி உயா் மகசூல் பெற வேண்டும் என்று தனது செய்திக்குறிப்பில் முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com