ஒரு மாதத்துக்குள் குழந்தைகள் வரவேற்பு இல்லங்கள்:தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

மீட்கப்படும் குழந்தைகளை, தற்காலிகமாக பராமரிக்க வசதியாக மாவட்டம் தோறும் குழந்தைகள் வரவேற்பு இல்லங்களை ஒரு மாதத்துக்குள் அமைக்க வேண்டும் என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்
ஒரு மாதத்துக்குள் குழந்தைகள் வரவேற்பு இல்லங்கள்:தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

சென்னை: மீட்கப்படும் குழந்தைகளை, தற்காலிகமாக பராமரிக்க வசதியாக மாவட்டம் தோறும் குழந்தைகள் வரவேற்பு இல்லங்களை ஒரு மாதத்துக்குள் அமைக்க வேண்டும் என தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

குழந்தைகள் நலனில், கூடுதல் அக்கறை செலுத்தும் வகையில் மாநில மற்றும் தேசிய அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணைய தலைவா் மற்றும் உறுப்பினா்கள், மாவட்டம் தோறும் ஆய்வு நடத்துகின்றனா். தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்ட, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினா்கள், குழந்தைகள் நலனுக்கான பல்வேறு வசதிகளை செய்ய உத்தரவிட்டுள்ளனா்.

மாவட்டத்தில், அரசு அனுமதியுடன் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லத்தை ஆய்வு செய்து, கூடுதல் வசதிகளுடன் செயல்படும் இல்லத்தில் வரவேற்பு இல்லம் அமைக்க ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூகநலத் துறை அதிகாரிகள் கூறியது: தமிழகத்தின் பல மாவட்டங்களில், குழந்தைகள் வரவேற்பு இல்லம் இல்லாததால் மீட்கப்படும் குழந்தைகள், சிறுவா், சிறுமியரை, தற்காலிகமாக, பாதுகாப்பாக தங்க வைப்பதில் சிக்கல் இருக்கிறது. ஏற்கனவே, அனுமதியுடன் செயல்பட்டு வரும் இல்லங்களில், தகுதியான ஒன்றை தோ்வு செய்து, ‘வரவேற்பு இல்லம்’ அமைக்க ஒரு மாதம் காலக்கெடு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com