மாநில உரிமைகளைக் காக்க தொடர்ந்து போராடுவோம்

மாநிலஉரிமைகளைக் காப்பாற்றிடஅதிமுக ஆட்சியை அகற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திமுக தலைவர் ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின்


சேலம்: மாநிலஉரிமைகளைக் காப்பாற்றிடஅதிமுக ஆட்சியை அகற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
சேலத்தில்மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகத்தின், "திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்' என்ற வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு,நூலை வெளியிட்டுப் பேசியது:
1956 முதல் 2013 வரை ஒரே இயக்கம்,ஒரே கொடி, ஒரே சின்னம் என்று லட்சியமாக வாழ்ந்தவர். அவருக்கு வழங்கப்பட்ட பதவி, உழைப்புக்கு வழங்கப்பட்ட பதவியாகும். 
1975 -இல் மறைந்த பிரதமர் இந்திராகாந்திக்கு நெருக்கடி ஏற்பட்டது.அப்போது நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தார்.அச் சமயத்தில் தமிழகத்தில் பதவியில் இருந்த திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 
இந்தியாவிலேயே நெருக்கடி நிலையை எதிர்த்த ஒரே கட்சி திமுக தான்.சென்னை கடற்கரை சாலையில் கருணாநிதி கூட்டம் நடத்தி,நெருக்கடி நிலையை திரும்பப் பெற வேண்டும் என்றும்,கைதானவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றினார்.
தீர்மானம் நிறைவேற்றியவுடன் ஆட்சி கலைக்கப்பட்டது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியிடம் பிடிவாதம் பிடித்த ஒரே மாவட்டச் செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம்.நான் உள்பட ஆயிரக்கணக்கான திமுகவினர் தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டோம்.அந்தவகையில், வீரபாண்டி ஆறுமுகமும் மிசா சட்டத்தில் கைதாகி சேலம், மதுரை சிறைகளில் அடைக்கப்பட்டார். அந்தக் கால கட்டங்களில் அவர் மீது 50 வழக்குகள் போடப்பட்டன.அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டு,கைது செய்யப்பட்டனர். 
2011 -இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, வீரபாண்டி ஆறுமுகம்சந்தித்த பிரச்னைகள், சித்ரவதை எல்லாம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இன்றைய நிலையில் மாநில உரிமைகளை இழந்து வருகிறோம்.அந்த உரிமைகளைக் காப்பாற்றிடும் வகையில் திமுக தொடர்ந்து விளக்கக் கூட்டங்களை நடத்தும்.தமிழகத்தைக் காப்பாற்ற அதிமுக ஆட்சியை அகற்றும் வரை தொடர்ந்து போராடுவோம் என்றார்.
விழாவில்,சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் வீரபாண்டி ஆ.ராஜா வரவேற்றார்.
திமுக துணைப் பொதுச் செயலாளர்கள் வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் அமைச்சர் பொன்முடி,முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் டி.எம்.செல்வகணபதி,எம்.பி.க்கள் எஸ்.ஆர்.பார்த்திபன், மத்திய மாவட்டச் செயலாளர் எம்எல்ஏ. ஆர்.ராஜேந்திரன்,மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம்,வீரபாண்டி எஸ்.ஆறுமுகத்தின் இளைய மகன் பிரபு உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com