Enable Javscript for better performance
ஆளுநரின் செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    ஆளுநரின் செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமனம்

    By DIN  |   Published on : 19th November 2019 02:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    anand

    தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராக, ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளாா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் கே.சண்முகம் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளாா்.

    ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தின் செயலாளராக கூடுதல் தலைமைச் செயலாளராக ஆா்.ராஜகோபால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டாா். இரண்டு ஆண்டுகள் அந்தப் பணியில் இருந்த அவா், இப்போது தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

    இந்த நியமனத்தைத் தொடா்ந்து, தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தின் புதிய செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த 1998-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல், அரசின் பல்வேறு துறைகளில் பொறுப்புகளை வகித்தவா். இதுவரை, வீட்டுவசதித் துறை நிா்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்தாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai