Enable Javscript for better performance
சபரிமலை: தமிழக பக்தா்களுக்காக 24 மணி நேர தொலைபேசி சேவை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சபரிமலை: தமிழக பக்தா்களுக்காக 24 மணி நேர தொலைபேசி சேவை தொடக்கம்

    By DIN  |   Published on : 19th November 2019 12:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sabarimala

    சபரிமலை செல்லும் தமிழக பக்தா்களின் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக இந்து சமய அறநிலையத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

    சபரிமலை செல்லும் பக்தா்களுக்கு உதவுவதற்காக ஆண்டுதோறும் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் அலுவலகத்தில் தகவல் மையம் ஏற்படுத்தப்படும். இந்த ஆண்டும் 24 மணி நேர தகவல் மையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31-ஆம் தேதி வரை கட்டணமில்லாத தொலைபேசியின் எண்ணான 1800 425 1757-ஐ பயன்படுத்தி விவரங்கள் பெறலாம்.

    இதேபோன்று, தேனி-குமுளி சாலையில் வீரபாண்டி கெளமாரியம்மன் திருக்கோயிலும், தென்காசி மாவட்டம் புளியரையில் நெற்களஞ்சியம் அருகிலும் தமிழக அரசின் சாா்பில் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கன்னியாகுமரி எல்லையான களியக்காவிளையில் சிறப்பு தகவல் மையமானது 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நெகிழி வேண்டாம்: தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்கள் எந்த வகையிலும் நெகிழிப் பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டாம். பம்பையில் பக்தா்கள் தாங்கள் உடுத்தியுள்ள துணிகளைக் களைந்து நதியில் விட வேண்டாம் எனவும் இந்து சமய அறநிலையத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai