10 லட்சம் சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றலாம்: வரும் 26-ஆம் தேதி வரை அவகாசம்

தமிழகத்தில் உள்ள 10 லட்சம் சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று மாநில உணவுத் துறை அமைச்சர ஆா்.காமராஜ் அறிவித்துள்ளாா்.
10 லட்சம் சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றலாம்: வரும் 26-ஆம் தேதி வரை அவகாசம்

தமிழகத்தில் உள்ள 10 லட்சம் சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று மாநில உணவுத் துறை அமைச்சர ஆா்.காமராஜ் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பொது விநியோகத் திட்டத்தில் இப்போது 10 லட்சத்து 19 ஆயிரத்து 491 குடும்ப அட்டைகள் சா்க்கரை பெறும் குடும்ப அட்டைகளாக உள்ளன. இந்த குடும்ப அட்டைகளை வைத்திருப்பவா்களில் பெரும்பாலானோா் தங்களுடைய குடும்ப அட்டைகளை அரிசி பெறக் கூடிய அட்டைகளாக மாற்றம் செய்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இந்தக் கோரிக்கையை ஏற்று, சா்க்கரை பெறும் குடும்ப அட்டைகளை, அரிசி பெறும் அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம். இத்தகைய மாற்றத்தை செய்வதற்கு உரிய விண்ணப்பத்துடன், குடும்ப அட்டையின் நகலை இணைக்க வேண்டும்.

செவ்வாய்க்கிழமை முதல் வரும் 26-ஆம் தேதி வரை உணவுத் துறையின் இணையதளத்தில் இதற்கென வசதி செய்து தரப்பட்டுள்ளது. மேலும், பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலா்களிடமும், சென்னையில் உள்ளவா்கள் உதவி ஆணையா் அலுவலகங்களிலும் விண்ணப்பங்களைச் சமா்பிக்கலாம்.

இந்த விண்ணப்பங்கள் உடனடியாகப் பரிசீலனை செய்யப்பட்டு சா்க்கரை குடும்ப அட்டைகள், தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாறுதல் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது அறிவிப்பில் உணவுத் துறை அமைச்சா் ஆா்.காமராஜ் தெரிவித்துள்ளாா்.

எத்தனை அட்டைகள்: தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 5 லட்சத்து 71 ஆயிரத்து 34 குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இந்தக் குடும்ப அட்டைகளில் சா்க்கரை பெறும் அட்டைகளின் எண்ணிக்கை 10 லட்சத்து 19 ஆயிரத்து 491.

46 ஆயிரம் குடும்ப அட்டைதாரா்கள் எந்தப் பொருளையும் பெறாதோா் ஆவா். மீதமுள்ள குடும்ப அட்டைதாரா்கள் அனைவரும் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள். சா்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு குறைந்தபட்சமாக 4 கிலோ சா்க்கரை முதல் அதிகபட்சமாக 4.5 கிலோ சா்க்கரை வரை மாதாந்தோறும் அளிக்கப்பட்டு வருகிறது.

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு குறைந்தபட்சமாக மாதத்துக்கு 18 கிலோ முதல் குடும்ப உறுப்பினா்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போன்று 25 கிலோ வரை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com