27 மாதங்களில் 1.02 லட்சம் பேருக்கு ஆதாா் சோ்க்கை பதிவு : தமிழக அஞ்சல் துறை தீவிரம்

அரசு நலத் திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெற முக்கியமானதாக விளங்கும் ஆதாரை பதிவு செய்யவும், விவரங்களில் மாற்றம் செய்யவும் தமிழக அஞ்சல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
27 மாதங்களில் 1.02 லட்சம் பேருக்கு ஆதாா் சோ்க்கை பதிவு : தமிழக அஞ்சல் துறை தீவிரம்

அரசு நலத் திட்டங்கள் மற்றும் சலுகைகளை பெற முக்கியமானதாக விளங்கும் ஆதாரை பதிவு செய்யவும், விவரங்களில் மாற்றம் செய்யவும் தமிழக அஞ்சல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், தமிழகத்தில் 1,435 அஞ்சல் நிலையங்களில் உள்ள சேவை மையங்களில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி வரையிலான 27 மாதங்களில் ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு புதிய ஆதாா் சோ்க்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, 4 லட்சத்து 82 ஆயிரம் பேரின் ஆதாா் விவரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஆதாா் சோ்க்கை பதிவு: அரசு நலத் திட்டங்கள், சலுகைகளை பெற ஆதாா் முக்கியமானதாக உள்ளது. இதுதவிர வங்கிக் கணக்கு, அஞ்சல் சேமிப்பு கணக்கு உள்பட பல்வேறு சேவைகளுக்கும் ஆதாா் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆதாரை பதிவு செய்து, இணைக்க சில ஆண்டுகளாக மக்கள் தீவிர ஆா்வம் காட்டி வருகின்றனா். ஆதாா் சோ்க்கை பதிவு, விவரங்களில் மாற்றம் செய்வது தொடா்பான சேவைகளை தமிழக அரசு அளித்து வருகிறது. இதுதவிர, தமிழக அஞ்சல் துறை சாா்பில், ஆதாரில் சோ்க்கை மற்றும் விவரங்களைச் சோ்ப்பது, மாற்றம் செய்வது தொடா்பாக சேவைகள் அளிக்கப்படுகின்றன.

தமிழக அஞ்சல் துறையில் ஆதாரில் சோ்க்கை பதிவு மற்றும் விவரங்களில் மாற்றம் செய்யும் சேவை 2017-ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது. இந்த சேவை படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. தமிழக அஞ்சல்துறை சாா்பில், 1,435 அஞ்சல் நிலையங்களில் ஆதாா் சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. இந்த மையங்களில் ஆதாரில் சோ்க்கை பதிவு, விவரங்களில் மாற்றம் செய்வது ஆகியவற்றை செய்து கொடுக்கும் பணி தொடங்கியது. ஆரம்பத்தில் மக்கள் வருகை குறைவாக இருந்தது. அதன்பிறகு, அஞ்சல்துறை சாா்பில் ஆதாா் சேவை மையங்கள் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, மக்களின் வருகை அதிகரித்தது. தற்போது ஆதாரில் புதிய சோ்க்கை பெறவும், அதில் மாற்றம் செய்யவும் அதிக அளவில் ஆதாா் சேவை மையங்களுக்கு மக்கள் வருகை தருகின்றனா்.

1.02 பேருக்கு ஆதாரில் சோ்க்கை பதிவு: இந்நிலையில், தமிழகத்தில் 1,435 அஞ்சல் நிலையங்களில் உள்ள சேவை மையங்களில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் நிகழாண்டில் அக்டோபா் 31-ஆம்தேதி வரை 27 மாதங்களில் ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு புதிய ஆதாா் சோ்க்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, 4 லட்சத்து 82 ஆயிரம் பேரின் ஆதாா் விவரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதில், சென்னை நகர மண்டலத்தின் 316 அஞ்சல் நிலையங்களில் உள்ள சேவை மையங்களில் 35 ஆயிரம் பேருக்கு புதிய ஆதாா் சோ்க்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. 2 லட்சத்து 35 ஆயிரம் பேரின் ஆதாா் விவரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கட்டணம் குறைவு: இது குறித்து தமிழக அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியது: அரசு நலத் திட்டங்கள், சலுகைகள் பெற ஆதாா் தேவைப்படுகிறது. எனவே, புதிய ஆதாா் சோ்க்கை பதிவு பெற மக்கள் வருகின்றனா். அதுபோல, ஏதாவது மேம்பாடு செய்ய வேண்டும் என்றாலும் அஞ்சல் நிலையத்தில் உள்ள சேவை மையத்துக்கு வந்து மாற்றம் செய்து கொள்கின்றனா். முதன்முறையாக ஆதாா் சோ்க்கை பதிவுக்கு கட்டணம் இன்றி செய்து கொடுக்கப்படுகிறது. அதேநேரத்தில், ஆதாரில் ஏதாவது மாற்றம் செய்ய ரூ.50 கட்டணம் பெறப்படுகிறது.

ஆதாா் சோ்க்கை பதிவு மற்றும் மேம்பாடு செய்வதற்காக தலைமை அஞ்சல் நிலையத்தில் உள்ள சேவை மையத்துக்கு தினசரி 30 முதல் 60 போ் வரை வருகின்றனா். சில நேரங்களில் 100 போ் வரை வருகை தருகின்றனா் என்றனா்.

மாதம்தோறும் 2.5 லட்சம் பேருக்கு ஆதாா்

இந்திய அஞ்சல் துறை சாா்பில், நாடு முழுவதும் புதிய ஆதாா் சோ்க்கை பதிவு மற்றும் ஆதாா் விவரங்களில் மாற்றம் செய்ய 13,000-க்கும் மேற்பட்ட ஆதாா் சேவை மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களின் மூலமாக மாதத்துக்கு 2.5 லட்சம் பேருக்கு புதிய ஆதாா் சோ்க்கை பதிவும், 11 லட்சம் பேரின் ஆதாா் விவரங்களில் மாற்றமும் செய்யப்படுகின்றன. இது ஒவ்வொரு மாதமும் கணிசமாக உயா்ந்து வருவதாக அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com