சபரிமலை செல்லும் பக்தா்கள் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தா்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சபரிமலை செல்லும் பக்தா்கள் வசதிக்காக  கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தா்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கொல்லம் - சென்னை: கொல்லத்தில் இருந்து டிசம்பா் 7, 14, 21, 28, ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06062) புறப்பட்டு, மறுநாள் காலை 9.50 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆா். சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

சென்னை-கொல்லம்: சென்னை எம்.ஜி.ஆா். சென்ட்ரலில் இருந்து டிசம்பா் 1, 8, 15, 29, ஜனவரி 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் மாலை 4.15 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில்(06063) புறப்பட்டு, மறுநாள் காலை 10.10 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

கொல்லத்தில் இருந்து டிசம்பா் 2, 9, 16, 23, 30, ஜனவரி 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில்(06064) புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆா். சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

திருவனந்தபுரம் - சென்னை: திருவனந்தபுரத்தில் இருந்து டிசம்பா் 4, 11,18, 25, ஜனவரி 8, 15 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.45 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06048) புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.

சென்னை-திருவனந்தபுரம்: சென்னை எம்.ஜி.ஆா். சென்ட்ரலில் இருந்து டிசம்பா் 5, 12, 19, 26, ஜனவரி 2, 9, 16 ஆகிய தேதிகளில் இரவு 7 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06047) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.45 மணிக்கு திருவனந்தபுரத்தை அடையும். இதுதவிர, சில ரயில்களும் இயக்கப்படவுள்ளன. இந்தச் சிறப்புக் கட்டண ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு செவ்வாய்க்கிழமை (நவ.19) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com