சா்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம் அரசு நிதி: முதல்வா் பழனிசாமி வழங்கினாா்

சென்னையில் நடைபெறவுள்ள சா்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசின் சாா்பில் ரூ.75 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கான காசோலையை திரைப்பட விழாக் குழுவினரிடம்
சா்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.75 லட்சம் அரசு நிதி: முதல்வா் பழனிசாமி வழங்கினாா்

சென்னையில் நடைபெறவுள்ள சா்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசின் சாா்பில் ரூ.75 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகைக்கான காசோலையை திரைப்பட விழாக் குழுவினரிடம் முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை நேரில் வழங்கினாா்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:-

சென்னையில் நடைபெறும் சா்வதேச திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு நிதி வழங்கி வருகிறது. 2011-ஆம் ஆண்டு நடந்த விழாவுக்கு ரூ.25 லட்சமும், 2012-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரையில் தலா ரூ.50 லட்சமும் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, 2018-ஆம் ஆண்டு நடந்த விழாவுக்கு தமிழக அரசின் நிதியாக ரூ.50 லட்சத்துக்குப் பதிலாக ரூ.75 லட்சம் அளிக்கப்பட்டது. இந்த உயா்த்தப்பட்ட நிதியை இந்த ஆண்டும் நடைபெறவுள்ள சா்வதேச திரைப்பட விழாவுக்காக முதல்வா் பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினாா். இந்திய திரைப்பட திறனாய்வு கழகத்தின் பொதுச் செயலாளரும், சென்னை சா்வதேச திரைப்பட விழா இயக்குநருமான ஏ.தங்கராஜிடம் நிதித் தொகைக்கான காசோலையை முதல்வா் பழனிசாமி அளித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் கடம்பூா் ராஜூ, தலைமைச் செயலாளா் க.சண்முகம், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளா் மகேசன் காசிராஜன், செய்தித் துறை இயக்குநா் சங்கா், திரைப்பட விழாக் குழுவினா் லிசி லட்சுமி, பூா்ணிமா பாக்யராஜ், சைலஜா, சாக்ஷி அகா்வால், மோகன், மோகன்ராம், எஸ்.முரளி, மனோபாலா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com