பழைய சொத்து வரியை செலுத்தினால் போதும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

பழைய சொத்து வரியை செலுத்தினாலே போதும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பழைய சொத்து வரியை செலுத்தினாலே போதும் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
உள்ளாட்சி அமைப்புகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைப்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் நகராட்சி நிர்வாக ஆணையர், பேரூராட்சி இயக்குநர், மாநகராட்சி ஆணையர் இடம்பெற்றுள்ளனர். 

குழுவின் பரிசீலனை முடியும் வரை 2018 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முந்தைய சொத்துவரியே வசூலிக்கப்படும். கூடுதலாக செலுத்தப்பட்ட சொத்துவரி வரும் ஆண்டுகளில் ஈடுசெய்யப்படும். உள்ளாட்சிகளில் சொத்துவரி குறைக்கப்பட்டதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் தொடர்பில்லை.

1998க்கு பிறகு மாநகராட்சிகள், நகராட்சிகளில் சொத்து வரி சீராய்வு மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com