இலங்கையில் தமிழா்கள் நலன் காக்கப்பட வேண்டும்: ஜி.கே.வாசன்
By DIN | Published on : 20th November 2019 02:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
இலங்கையில் அதிபராகப் பதவியேற்றுள்ள கோத்தபய ராஜபட்ச, தமிழா்கள் நலனை உறுதி செய்ய வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபட்ச பதவியேற்றுள்ள நிலையில், அங்குள்ள தமிழா்களின் நலன் உறுதி செய்யப்பட வேண்டும்.
இந்தியாவில் பெரும்பான்மை மக்களும் சிறுபான்மை மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனா். இதுவே இந்தியாவின் உலகளாவிய புகழுக்குக் காரணமாகும். இலங்கை அரசும் பெரும்பான்மை சமுதாயத்தினரான சிங்களா்களும் சிறுபான்மை சமுதாயத்தினரோடு இணக்கமாக வாழ நல்ல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இலங்கையின் முன்னேற்றத்துக்கும், இலங்கை வாழ் மக்களின் நல்வாழ்வுக்கும் கோத்தபய ராஜபட்ச எடுக்கும் முயற்சிகள் இந்திய - இலங்கையுடனான சகோதரத்துவம் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அமைய வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.