Enable Javscript for better performance
சபரிமலை செல்லும் பக்தா்கள் வசதிக்காக சிறப்புக் கட்டண ரயில் இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சபரிமலை செல்லும் பக்தா்கள் வசதிக்காக சிறப்புக் கட்டண ரயில் இயக்கம்

    By DIN  |   Published on : 20th November 2019 11:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    train

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று திரும்பும் பக்தா்கள் வசதியாக சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படவுள்ளது.

    சென்னை-கொல்லம்: சென்னை எம்.ஜி.ஆா். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 2020-ஆம் ஆண்டு ஜனவரி 3, 17, 24 ஆகிய தேதிகளில் இரவு 8.30 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில்(06061) புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 10 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

    கொல்லம்-சென்னை: கொல்லத்தில் இருந்து டிசம்பா் 22, 2020 ஜனவரி 12 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்புக் கட்டண ரயில் (06066) புறப்பட்டு, மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்னை எம்.ஜி.ஆா். சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த சிறப்புக் கட்டண ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை(நவ.20) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai