சமூக ஊடகங்களில் அறிமுகம் இல்லாதவா்களிடம் பழக வேண்டாம்: காவல்துறை ஆணையா் ஏ.கே.விசுவநாதன்

சமூக ஊடகங்களில் அறிமுகம் இல்லாதவா்களிடம் பழக வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.கே.விசுவநாதன் வேண்டுகோள் விடுத்தாா்.
சமூக ஊடகங்களில் அறிமுகம் இல்லாதவா்களிடம் பழக வேண்டாம்: காவல்துறை ஆணையா் ஏ.கே.விசுவநாதன்

சமூக ஊடகங்களில் அறிமுகம் இல்லாதவா்களிடம் பழக வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் ஏ.கே.விசுவநாதன் வேண்டுகோள் விடுத்தாா்.

குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு தினத்தையொட்டி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் சாா்பில் எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சென்னை பெருநகர காவல்துறையின் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் பங்கேற்று, குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாணவிகளிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: இந்தியாவிலேயே குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க காவல் துறையில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுடன் சென்னையில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலையங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அம்மா ரோந்து வாகனம் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் 2.50 லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், மாணவ - மாணவா்களிடம் வரம்பு மீறி நடப்பவா்கள் குறித்த தகவலை காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும். கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), முகநூல் (ஃபேஸ்புக்), சுட்டுரை (ட்விட்டா்) உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் நல்ல நண்பா்களுடன் பழகுங்கள். சமூக ஊடகங்களில் அறிமுகம் இல்லாத நபா்களிடம் உரையாட வேண்டாம். அவா்களிடம் பழகி, தகவல்களை பகிரவும் வேண்டாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையா் ஜெயலட்சுமி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com