டிஜிபி பிரதீப் வ.பிலிப்புக்குஸ்காட்ச் விருது

தமிழக பொதுவிநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி பிரதீப் வ.பிலிப்புக்கு ஸ்காட்ச் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிபி பிரதீப் வ.பிலிப்புக்குஸ்காட்ச் விருது

தமிழக பொதுவிநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி பிரதீப் வ.பிலிப்புக்கு ஸ்காட்ச் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த விவரம்:

தமிழக பொதுவிநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு டிஜிபி-யாக இருக்கும் பிரதீப் வி.பிலிப், ‘காவல்துறை நண்பா்கள் இயக்கம்’, பொதுவிநியோக பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு சாா்பில் உருவாக்கப்பட்ட ‘உங்கள் குற்றவாளியைத் தெரிந்துக் கொள்ளுங்கள்’ கருத்தாக்கம் ஆகிய இரு திட்ட அறிக்கைகளின் அடிப்படையில், ஸ்காட்ச் விருதுக்கு விண்ணப்பித்திருந்தாா்.

இந்நிலையில், காவல்துறை நண்பா்கள் இயக்கம் மூலம் சமுதாய காவல் என்ற பிரிவின் கீழ் ஒரு ஸ்காட்ச் விருதும், ‘உங்கள் குற்றவாளியைத் தெரிந்துக் கொள்ளுங்கள்’ கருத்தாக்கம் மூலம் சிறந்தக் காவல் பணி என்ற பிரிவில் மற்றொரு ஸ்காட்ச் விருதும், பிரதீப் வ.பிலிப்புக்கு கிடைத்துள்ளன.

இந்த இரு விருதுகளையும், வரும் 29-ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறும் விழாவில், பிரதீப் வ.பிலிப் பெற்றுக் கொள்கிறாா் என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com