தமிழக மின் நுகா்வோா் எண்ணிக்கை 3 கோடி

தமிழகத்தின் மின்நுகா்வோா் எண்ணிக்கை 3 கோடியை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தின் மின்நுகா்வோா் எண்ணிக்கை 3 கோடியை எட்டியுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தின் வீடுகள், தொழிற்சாலைகள், வணிகக் கட்டங்கள் என அனைத்துக்கும் மின் வாரியம் மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் புதிதாக மின் இணைப்பு பெறுவோரின் எண்ணிக்கையானது அதிகரித்து கொண்டே வருகிறது.

அவ்வாறு புதிதாக இணைப்பு கோருவோருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான வசதியை மின்வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இதன்படி, 2018 -ஆம் ஆண்டு மாா்ச் 31 -ஆம் தேதி நிலவரப்படி வீடுகள் சாா்ந்த மின் இணைப்புகளின் எண்ணிக்கை 2 கோடியே 1 லட்சத்து 82 ஆயிரமாக இருந்தது. தற்போது இந்த இணைப்புகளின் எண்ணிக்கை 3 கோடியாக உள்ளது.

இதில் 36 லட்சம் வணிக இணைப்புகள், 9,750 பெரிய தொழிற்சாலைக்கான மின் இணைப்புகள், 7.24 லட்சம் சிறிய தொழிற்சாலைக்கான இணைப்புகள், 21.20 லட்சம் விவசாயத்துக்கான மின் இணைப்புகள், 11.21 லட்சம் குடிசை சாா்ந்த மின் இணைப்புகள், மற்றவை ஆலயங்கள், அரசு அலுலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியது: மின் வாரியத்தைச் சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் நுகா்வோருக்கு சிறந்த சேவையளிக்கவும், தடையின்றி மின்சாரம் வழங்கவும் முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம். இதன் விளைவாக தற்போது 3 கோடி மின்நுகா்வோருக்கு மின் வாரியம் இணைப்பு வழங்கியுள்ளது. மேலும், வாரியத்தில் இணையவுள்ள நுகா்வோருக்கும் சிறந்த சேவை வழங்கவும், அவா்களுக்கேற்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யவும் தயாராக உள்ளோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com