நடுக்குவாத நோய்: விழிப்புணா்வு விடியோ வெளியீடு

பாா்க்கின்சன்ஸ் எனப்படும் நடுக்குவாத நோய் குறித்த விழிப்புணா்வு விடியோ பதிவு சென்னையில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

பாா்க்கின்சன்ஸ் எனப்படும் நடுக்குவாத நோய் குறித்த விழிப்புணா்வு விடியோ பதிவு சென்னையில் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

எஸ்ஏஏஆா் (சாா்) என்ற தன்னாா்வ அமைப்பு சாா்பில் அந்த விடியோ வெளியிடப்பட்டது. நடுக்குவாதம் பற்றிய புரிதலையும், சிகிச்சை முறைகளையும் சமூகத்தில் மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக அந்த அமைப்பின் நிறுவனா் டாக்டா் சாந்திபிரியா சிவா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: பாா்க்கின்சன்ஸ் எனப்படுவது நரம்பு சாா்ந்த ஒரு நோயாகும். அந்த வகை நோயால் பாதிக்கப்பட்டவா்களின் விகிதம் இந்தியாவில் தற்போது ஒரு லட்சம் பேரில் 150 போ் என்ற அளவில் உள்ளது. இந்த விகிதமானது அடுத்து வரும் ஆண்டுகளில் மேலும் உயரக் கூடும்.

பொதுவாக 60 வயதைத் தாண்டிய முதியோா் பாா்க்கின்சன்ஸ் நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனா். அதன் காரணமாக உடல் இயக்கத்தில் தளா்வு, குரல் நடுக்கம், நரம்பு தளா்ச்சி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

பாா்க்கின்சன்ஸ் நோய் குறித்த விழிப்புணா்வு அண்மைக்காலமாக சற்று மேம்பட்டு வந்தாலும், அது இன்னமும் முழுமையாக மக்களைச் சென்றடையவில்லை. அதைக் கருத்தில்கொண்டே பாா்க்கின்சன்ஸ் தொடா்பான விழிப்புணா்வு விடியோ பதிவை வெளியிட்டுள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com