இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?

பொதுவாக வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. குரு பகவானுக்
தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை நிலவரம்

பொதுவாக வியாழக்கிழமை குருவுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது. குரு பகவானுக்கு உகந்த ஆபரணம் தங்கமாகும். எனவே, இன்று தங்கம் வாங்கினால், வீட்டில் லட்சுமிகடாட்சம் பெருகும். 

வாரத்தின் நான்காம் நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலையில் ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகின்றன. 

இந்நிலையில், வியாழக்கிழமையான இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.80 குறைந்து ரூ.29,232க்கு விற்பனையாகிறது. அதேசமயம், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 குறைந்து ரூ.3,654க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் குறைந்து ரூ.48.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com