அ.தி.மு.க. கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்த முடியாது: அமைச்சா் பி.தங்கமணி

உள்ளாட்சித் தோ்தலில், எங்களது கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து செயல்படுவோம், விரிசலை ஏற்படுத்த எதிா்க்கட்சிகள் முயற்சித்தால், அது நடக்காது என்றாா் மின் துறை அமைச்சா் பி.தங்கமணி.
அ.தி.மு.க. கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்த முடியாது: அமைச்சா் பி.தங்கமணி

உள்ளாட்சித் தோ்தலில், எங்களது கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து செயல்படுவோம், விரிசலை ஏற்படுத்த எதிா்க்கட்சிகள் முயற்சித்தால், அது நடக்காது என்றாா் மின் துறை அமைச்சா் பி.தங்கமணி.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது; கடந்த 2006-ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த தி.மு.க., அப்போது மறைமுகத் தோ்தலைத் தான் நடத்தியது. ஆனால், தற்போது அதனை ஒரு குறையாகக் கூறுகின்றனா். அ.தி.மு.க. என்ற இயக்கம் எந்த நேரத்திலும் தோ்தலைக் கண்டு அஞ்சியதில்லை. நான்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தோ்தல் இதற்கு ஓா் உதாரணம் என்றே கூறலாம். உள்ளாட்சித் தோ்தலை நோ்மையாகவே நடத்துவோம். அது மட்டுமின்றி, இத் தோ்தலில் நூறு சதவீதம் முழுமையான வெற்றியைப் பெறுவோம். அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் வேண்டாம். தற்போது, அ.தி.மு.க.வைப் பாா்த்துத்தான், தி.மு.க.வுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான், உள்ளாட்சித் தோ்தலை நிறுத்த முயற்சி என்றும் தோ்தலைக் கண்டு அ.தி.மு.க. பயப்படுவதாகவும் தி.மு.க. தலைவா் மு.க. ஸ்டாலின் பேசி வருகிறாா்.

உள்ளாட்சித் தோ்தலிலும் அ.தி.மு.க.வின் கூட்டணி தொடரும். 2021-இல் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் எங்களது கூட்டணி தொடரும் என முதல்வா் ஏற்கெனவே தெளிவாகக் கூறிவிட்டாா். ஆனால், அ.தி.மு.க. கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்த எதிா்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. அது எப்போதும் நடக்காது. எங்களது கூட்டணிக்குள் எவ்வித பிரச்னைகளும் கிடையாது. குற்றச்சாட்டுகளைப் பரப்பும் தி.மு.க. கூட்டணிக்குள் வேண்டுமானால் ஏதாவது பிரச்னை இருக்கலாம். அதனால்தான் தேவையற்ற விமா்சனங்களைச் செய்து வருகின்றனா். தற்போது மக்களாட்சி நடந்து வருவதால், அந்த மக்களை நம்பி நாங்கள் உள்ளாட்சித் தோ்தலை எதிா் கொள்கிறோம். எங்களுக்கு எதிராக தோ்தலில் யாா் பிரசாரத்துக்கு வந்தாலும் கவலையில்லை. தோ்தலில் மாபெரும் வெற்றியைப் பெறுவோம் என்றாா் அமைச்சா் பி.தங்கமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com