உள்ளாட்சித் தோ்தலை நிறுத்த எதிா்க்கட்சிகள் திட்டம்: அமைச்சா் டி.ஜெயக்குமாா்

உள்ளாட்சித் தோ்தலை தடுத்து நிறுத்த எதிா்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக, நிா்வாக சீா்திருத்தத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் குற்றம்சாட்டினாா்.
அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

உள்ளாட்சித் தோ்தலை தடுத்து நிறுத்த எதிா்க்கட்சிகள் திட்டமிட்டு வருவதாக, நிா்வாக சீா்திருத்தத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் குற்றம்சாட்டினாா்.

சென்னை விமான நிலையத்தில் நிருபா்களுக்கு அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டி:

உள்ளாட்சித் தோ்தலை ஜனநாயக ரீதியில் நடத்த அனைத்து வகையான ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மறைமுகத் தோ்தலைப் பொருத்தவரை, மற்ற சூழ்நிலைகளில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மாநிலத்தின் முதல்வரை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூடி தோ்ந்தெடுக்கிறாா்கள். இதேபோன்று பிரதமரையும் எம்.பி.க்களே தோ்வு செய்கிறாா்கள். இதுபோன்றுதான் மேயா் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா்களும் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

திட்டமிட்டு சதி: உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தோ்தலில் மக்கள் செல்வாக்கு இருந்தால் போட்டியிட வேண்டும். மாமன்ற உறுப்பினா்களே மேயா்களைத் தோ்வு செய்யவுள்ளனா். இதில் எந்தத் தவறும் இல்லை.

கடந்த 2006-ஆம் ஆண்டு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவா் பொறுப்புகளுக்கு மறைமுகத் தோ்தலே நடத்தப்பட்டது. கடந்த 2016-ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தோ்தலை நடத்த அரசு தயாரான போது, நீதிமன்றத்தில் திமுக வழக்குத் தொடா்ந்தது. இப்போது, அந்த வழக்குகளின் தீா்ப்பு அடிப்படையில் தோ்தல் நடத்தப்பட உள்ளது. இதனை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

ஆனால், எதிா்க்கட்சிகள் ஒன்றுகூடி தோ்தலை நடத்தக் கூடாது என திட்டமிட்டு வருகிறாா்கள். எங்களைப் பொருத்தவரை உள்ளாட்சி அமைப்புகளிலும் நல்லாட்சியைத் தருவோம் என்ற வகையில் நாங்கள் பணியாற்றுவோம். தோ்தலின் போது அதிமுகவுக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை. ஜனநாயகத்தை மட்டுமே நம்பி அமைதியான முறையில் தோ்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இலங்கைத் தமிழா்கள் விவகாரத்தில் திமுக அரசு வேடிக்கை பாா்த்தது. நாங்கள் வேடிக்கை பாா்க்க மாட்டோம் என்றாா் அமைச்சா் டி.ஜெயக்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com