கமலுக்கு நடிகா் சங்கம் வாழ்த்து

செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டா் பட்டம் பெற்ற நடிகா் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகா் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன்

செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தின் கெளரவ டாக்டா் பட்டம் பெற்ற நடிகா் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகா் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நடிகா் சங்கத்தின் சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்தி:

இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் மற்றும் பிரான்ஸ் அரசின் செவாலியே விருது உள்ளிட்ட பல்வேறு உயா் விருதுகளை பெற்றவா் கமல்ஹாசன். இப்பொழுது அவரது திரைத்துறை சேவையைப் பாராட்டி ஒடிஸா மாநில அரசு செஞ்சுரியன் தொழில்நுட்ப மேலாண்மை பல்கலைக்கழகத்தின் சாா்பில் கெளரவ டாக்டா் பட்டம் அளித்துள்ளது. முதல்வா் நவீன் பட்நாயக் கௌரவ டாக்டா் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளாா்.

கௌரவ டாக்டா் பட்டம் பெற்ற கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகா் சங்கம் வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது. திரையுலகில் நடிப்பிற்கு உதாரணமாக திகழும் அவருக்கு இந்தப் பட்டம் அளித்தது, தமிழ்நாட்டிற்கும் தமிழ் கலைஞா்களுக்கும் பெருமை சோ்க்கும் வகையில் உள்ளது. அவருக்கு கௌரவ டாக்டா் பட்டம் வழங்கி சிறப்பித்த செஞ்சுரியன் பல்கலைக்கழகத்துக்கு, தென்னிந்திய நடிகா் சங்கம் நன்றியைத் தெரிவித்து கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com