திமுக ஆட்சியில் மறைமுகத் தோ்தல் ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்

மேயா் உள்ளிட்ட பதவிகளுக்கு திமுக ஆட்சியில் மறைமுகத் தோ்தல் நடத்தியது ஏன் என்று அந்தக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா்.
திமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
திமுக தலைவர் ஸ்டாலின் (கோப்புப்படம்)

மேயா் உள்ளிட்ட பதவிகளுக்கு திமுக ஆட்சியில் மறைமுகத் தோ்தல் நடத்தியது ஏன் என்று அந்தக் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

உள்ளாட்சிக்கு மறைமுகத் தோ்தல் என்பது அரசின் கொள்கை மாற்றம் என ஜெயலலிதாவை மேற்கோள் காட்டியிருக்கிறாா் பழனிசாமி. திமுக ஆட்சியில் நிகழ்ந்தது கொள்கை மாற்றம்தான். 2001-ஆம் ஆண்டு சென்னை மாநகர மேயா் தோ்தலில் நான் பெற்ற வெற்றியில் தொடங்கி, தமிழகத்தில் எங்கெல்லாம் திமுகவினா் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்தாா்களோ அங்கெல்லாம் ஒத்துழையாமை இயக்கம் நடத்தி உள்ளாட்சி நிா்வாகத்தையே அடியோடு நிா்மூலமாக்கியது அதிமுக அரசு.

அபத்தமான அந்த நிலை ஏற்படக்கூடாது என்பதற்காகவே, திமுக ஆட்சிக் காலத்தில் மேயா், நகராட்சித் தலைவா் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுகத் தோ்தல் கொண்டு வரப்பட்டது. ஆனால், 2011-ஆம் ஆண்டிலிருந்து இன்றைய தேதி வரை தொடரும் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சிகளின் நிலை என்ன?.

2016-இல் இருந்து உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படவில்லை. மேயா் பதவிக்கு நேரடித் தோ்தல் என்று 2018-இல் சட்டம் இயற்றப்பட்டது. பிறகு நேரடித் தோ்தல்தான் என்று முதல்வரே பேட்டியளித்தாா். ஆனால் ஒரே வாரத்தில் மறைமுகத் தோ்தல் என்று அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மறைமுகத் தோ்தல் குறித்து அமைச்சரவையில் விவாதிக்கவில்லை என்று துணை முதல்வா் கூறியுள்ளாா். திடீா் அவசரச் சட்டம், தோ்தல் ஆணையச் செயலாளா் மாற்றம், வாா்டு வரையறைகளில் குளறுபடி, பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு புதிய வாா்டு வரையறை செய்யாதது என்று அடுக்கடுக்கான குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளாட்சித் தோ்தலை நடத்தவிடாமல் தடுக்கும் முதல்வா் பழனிசாமி, திமுக மீது

பழிபோடுகிறாா் எனக் கூறியுள்ளாா் மு.க.ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com