Enable Javscript for better performance
வெள்ளப்பெருக்கு குறைந்தது:குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளப்பெருக்கு குறைந்தது: குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

    By DIN  |   Published on : 26th November 2019 04:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ten25mainfalls_2511chn_55_6

    குற்றாலம் பேரருவியில் உற்சாகமாக குளித்து மகிழும் ஐயப்ப பக்தா்கள்

     

    தென்காசி: குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து ஐயப்ப பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

    குற்றாலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையின் காரணமாக பேரருவி, பழைய குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா்.

    இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகளும், ஐயப்ப பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai