திருவண்ணாமலையில் குபேர கிரிவலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு 

குபேர கிரிவலத்தையொட்டி, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து, கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீகுபேர லிங்க சன்னதியில் வழிபட்டனர்.

திருவண்ணாமலை: குபேர கிரிவலத்தையொட்டி, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து, கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீகுபேர லிங்க சன்னதியில் வழிபட்டனர்.
ஆண்டுதோறும் கார்த்திகை மாத சிவராத்திரி அன்று  மாலை 6 மணி முதல் 7 மணி வரை குபேர லிங்கத்துக்கு, செல்வத்துக்கு அதிபதியான குபேர கடவுளே மறைமுகமாக வந்து பூஜை செய்வார். பூஜைக்கு பிறகு 14 கி.மீ தொலைவு கிரிவலப் பாதையை வலம் வருவார். குபேரர் பூஜை செய்வதைக் காணும் பக்தர்கள் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். இதனால், அண்மைக் காலமாக கிரிவலப் பாதையில் உள்ள குபேர லிங்கத்துக்கு கார்த்திகை மாத சிவராத்திரி தினத்தன்று சிறப்புப் பூஜைகள், மகா தீபாராதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குவிந்த பக்தர்கள்: அதன்படி, குபேர கிரிவல தினமான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இவர்கள், கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீகுபேரலிங்க சன்னதியில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்கு லிங்கத்துக்கு குபேரரே செய்வதாக நம்பப்படும் சிறப்பு அபிஷேகம், ஆராதனையைக் காண பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால் கோயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
கிரிவலம் வந்த பக்தர்கள்: தொடர்ந்து, பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கள்கிழமை காலை வரை விடிய, விடிய கிரிவலம் வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
 சிறப்பு யாகம்: குபேர கிரிவலத்தையொட்டி, குபேரலிங்க சன்னதி அருகே உள்ள வள்ளலார் சத்திய தருமசாலையில் உலக நன்மைக்காக மகாலட்சுமி, குபேர யாகம், 108 வலம்புரி சங்கு பூஜை நடைபெற்றன. பின்னர், 200 சிவனடியார்களுக்கு வஸ்திர தானமும், பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com