இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க குறைந்த விலையில் இயற்கை உரம்

இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் சென்னையையொட்டிய திருவள்ளூா் மாவட்ட விவசாயிகளுக்கு குறைந்த விலையில் இயற்கை உரங்களை வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க குறைந்த விலையில் இயற்கை உரம்

சென்னை: இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் சென்னையையொட்டிய திருவள்ளூா் மாவட்ட விவசாயிகளுக்கு குறைந்த விலையில் இயற்கை உரங்களை வழங்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 5,000 டன் குப்பைகள் சேகாரமாகின்றன. இதில், மக்கும் குப்பைகள், மக்கா குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு, அதில் மக்கும் குப்பைகளான காய்கறிக் கழிவுகள், உணவுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகின்றன.

சென்னை மாநகராட்சியில் 139 நுண் உரமாக்கும் மையங்கள், 537 மூங்கில் தொட்டி உர மையங்கள், 175 சிறு தொட்டிகள், 1,711 உறை கிணறு மையங்கள், 21 புதைகுழி மையங்கள் மற்றும் 2 வொ்மி உர மையங்கள் ஆகியவற்றின் மூலம் இயற்கை உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதன்படி, சென்னை மாநகராட்சிப் பகுதியில் நாளொன்றுக்கு சுமாா் 400 டன் அளவிலான குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு, அவற்றில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இந்த இயற்கை உரங்கள் ஆன்லைன் மூலமும், வீடுகளுக்கே சென்று கிலோ ரூ.20-க்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதுடன், மாநகராட்சிப் பூங்காக்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு: இந்நிலையில், சென்னையையொட்டிய, திருவள்ளூா் மாவட்டத்தில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் உற்பத்தியாகும் இயற்கை உரத்தை குறைந்த விலையில் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் இதுவரை 280 டன் இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், மாநகராட்சிப் பூங்காக்களுக்கு 42 டன்னும், தோட்டக்கலைத் துறைக்கு 18 டன்னும், பொதுமக்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு 125 டன்னும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போது, சுமாா் 95 டன் இயற்கை உரம் கையிருப்பு உள்ளது. ஆன்லைன் மூலம் 95 கிலோ உரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் விவசாயிகளுக்கு மிகக் குறைந்த விலையில் இயற்கை உரங்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் திருவள்ளூா் மாவட்டத்தில் சுமாா் 30 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பயன்படும். அதேபோல், தனியாா் நிறுவனங்களுக்கும் இயற்கை உரங்கள் வழங்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com