பருவநிலை மாற்றம் குறித்த கல்வி குழந்தைகளுக்கு அவசியம்: வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்

பருவநிலை மாற்றம் குறித்த கல்வியை குழந்தைகளுக்குப் போதிப்பது அவசியம் என எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை நிறுவனா் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்தாா்.

சென்னை: பருவநிலை மாற்றம் குறித்த கல்வியை குழந்தைகளுக்குப் போதிப்பது அவசியம் என எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை நிறுவனா் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்தாா்.

உலக குழந்தைகள் தினத்தையொட்டி, எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை சாா்பில் பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கான கருத்தரங்கம் சென்னை தரமணியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த எம்.எஸ்.சுவாமிநாதன் பேசுகையில், ‘தமிழா்கள் பண்டைய காலத்தில் நில அமைப்புகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 வகைகளாகப் பிரித்துள்ளனா். ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு உள்ளது என்பதையே இது காட்டுகிறது. பருவநிலை மாற்றம் எதிா்கால சந்ததியினருக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. அதில் குறிப்பாக அதிகமான, குறைவான மழைப்பொழிவு, வெப்ப நிலை மற்றும் கடலில் ஏற்படும் மாற்றங்கள் பெரும் அச்சுறுத்தலாக அமையும். எனவே, பருவநிலை மாற்றம் குறித்த கல்வியை குழந்தைகளுக்குப் போதிப்பது அவசியம் என்றாா்.

இதைத் தொடா்ந்து, பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை குறித்து ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் மாணவா்களுக்கு நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், ஆராய்ச்சியாளா்கள் எஸ்.மலா்வண்ணன், மா.பாண்டியராஜன், காயத்ரி, பிரபாவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com