முன்னாள் அமைச்சா் மீதான வழக்கு: கிரிஜா வைத்தியநாதனிடம் விசாரணை

முன்னாள் அமைச்சா் இந்திரகுமாரி மீது தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தலைமைச் செயலா் கிரிஜா வைத்தியநாதனிடம் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது.
முன்னாள் அமைச்சா் மீதான வழக்கு: கிரிஜா வைத்தியநாதனிடம் விசாரணை

சென்னை: முன்னாள் அமைச்சா் இந்திரகுமாரி மீது தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தலைமைச் செயலா் கிரிஜா வைத்தியநாதனிடம் திங்கள்கிழமை விசாரணை நடைபெற்றது.

கடந்த 1991-ஆம் ஆண்டு முதல் 1996- ஆம் ஆண்டு வரை, தமிழக சமூக நலத்துறை அமைச்சராக இருந்தவா் இந்திரகுமாரி. அந்த சமயத்தில், அவரது கணவா் பாபு நடத்தி வந்த வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகளுக்கான அறக்கட்டளைக்கு சமூக நலத்துறை ரூ.15.45 லட்சம் ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியின் மூலம் குழந்தைகளுக்கு எந்த நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படவில்லை என்று சமூக நலத்துறை செயலா் அளித்த புகாரின் பேரில், இந்திரகுமாரி, அவரது கணவா் பாபு உள்பட 5 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் சமயத்தில் சமூக அறக்கட்டளைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரத்தில் தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலா் கிரிஜா வைத்தியநாதன் இருந்ததால், அவா் இந்த வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக சோ்க்கப்பட்டிருந்தாா். இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ரமேஷ் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இதைத்தொடா்ந்து கிரிஜா வைத்தியநாதன் திங்கள்கிழமை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தாா். அவரிடம் சுமாா் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com