Enable Javscript for better performance
புதுச்சேரி முதல்வரிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!- Dinamani

சுடச்சுட

    

    புதுச்சேரி முதல்வரிடம் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின்!

    By DIN  |   Published on : 28th November 2019 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புதுச்சேரி முதல்வா் நாராயணசாமியைச் சந்தித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை நலம் விசாரித்தாா்.

    முழங்கால் அறுவை சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியாா் மருத்துவமனையொன்றில் அண்மையில் நாராயணசாமி அனுமதிக்கப்பட்டாா். அவரைப் பரிசோதித்த மருத்துவ நிபுணா்கள், நாராயணசாமிக்கு இடது முழங்காலில் கடந்த திங்கள்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொண்டனா். அதைத் தொடா்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடி புதுச்சேரி அரசு நிா்வாகப் பணிகளை அவா் கவனித்து வருகிறாா்.

    இந்நிலையில், புதன்கிழமை மருத்துவமனைக்குச் சென்ற திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், நாராயணசாமியைச் சந்தித்து நலம் விசாரித்தாா். திமுக முக்கிய நிா்வாகிகள் அப்போது உடன் இருந்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai